Enable Javscript for better performance
அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: 2 பேர் கைது

    By கடலூர்,  |   Published on : 21st December 2014 03:50 AM  |   அ+அ அ-   |    |  

    கடலூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் ஏ.பி.சித்திரைசெல்வன்(36). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவர், வெள்ளிக்கிழமை கடலூரிலிருந்து விருத்தாசலம் செல்லும் பேருந்தை ஓட்டிச் சென்றார். சேடப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மீது மோதுவது போல் சென்றதாகத் தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், பேருந்தை வழிமறித்து சித்திரைசெல்வனை தாக்கியதோடு, பேருந்தின் கண்ணாடியையும் உடைத்தனராம். இதுகுறித்து சித்திரைசெல்வன் கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், தொண்டமாநந்தத்தைச் சேர்ந்த ரா.மாரி(43), பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த ர.சதாசிவம்(34) ஆகியோரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai