சுடச்சுட

    

    அரசு மருத்துவமனையில் கோட்டாட்சியர் ஆய்வு

    By விருத்தாசலம்  |   Published on : 21st December 2014 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கோட்டாட்சியர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    தருமபுரி மருத்துவமனையில் அண்மையில் பச்சிளங்குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகள் பிரிவுகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிரா பொருத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

    இதன்படி விருத்தாசலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு பகுதியில், சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

    இதனை கோட்டாட்சியர் ப.மு.செந்தில்குமார், நகர்மன்றத் தலைவர் ப.அருளழகன் ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிகளுக்காக அருகிலுள்ள இடங்களை கையகப் படுத்துவது தொடர்பாக, அதன் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆய்வின்போது, தலைமை மருத்துவர் குலோத்துங்கச்சோழன், அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai