சுடச்சுட

  

  சிதம்பரம் அருகேயுள்ள கீழ்அனுவம்பட்டு கிராமத்தில் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் இலவச கைவினைப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

  கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் இலவசமாக தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. மேலும், கைவினைப் பயிற்சிகளும், செயல்முறை விளக்கமும் வழங்கப்படுகிறது.

  இத் திட்டத்தின்படி சிதம்பரம் அருகே கீழ்அனுவம்பட்டு கிராமத்தில் உள்ள விரிவாக்க மையத்தில் ஊதுவத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பது குறித்தும், குறைந்த விலையில் பேன்சி கவரிங் நகைகள் தயார் செய்வது குறித்தும் செயல்முறை விளக்கம் மூலம் மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

  சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் உள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மின்னியல் துறைத் தலைவர் ஆர்.தனவிஜயன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ஜி.குப்பன் தலைமை வகித்தார். கிராமத் தலைவர் ஏ.ஆர்.ராஜேந்திரன் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai