சுடச்சுட

  

  குண்டர் சட்டத்தில் ரௌடியை கைது செய்ய உத்தரவு

  By சிதம்பரம்  |   Published on : 21st December 2014 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரத்தில் வெடிகுண்டு வெடிப்பு வழக்கு, இரட்டை கொலை வழக்கு ஆகியவற்றில் தொடர்புடைய திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல ரௌடி மோகன்ராமை (35) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

  சிதம்பரம் மாரியப்பாநகரில் பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத் வீட்டில் கடந்த மே மாதம் வெடிகுண்டு வெடித்ததில் ரௌடி மோகன்ராம் படுகாயமுற்றார். மேலும், அந்த வீட்டிலிருந்து டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, யு.எஸ்.ஏ. முத்திரை பதித்த 6 எம்.எம். துப்பாக்கி, சீனா செல்போன், அரிவாள்கள் மற்றும் டைரி, சிம்கார்டுகள், பான்கார்டுகள் ஆகியவை போலீஸாரால் கைப்பற்றப்பட்டன.

  இதையடுத்து சிதம்பரம் அண்ணாமலைநகரில் கலுங்குமேட்டில் வசிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களான ஆம்புலன்ஸ் குமார்(34), அவரது தம்பி ராஜேஷ்(32) ஆகிய இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரு வழக்கிலும் சம்பத்தப்பட்ட முக்கிய குற்றவாளியான ரௌடி மோகன்ராம் கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி சிறையில் உள்ளார்.

  இந்நிலையில், மோகன்ராமை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ், ஓராண்டு சிறையிலடைக்க வேண்டும் என அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் பி.முருகானந்தம், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதிகா மூலம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து கோப்புகளை அனுப்பினார். அதன்பேரில் ரௌடி மோகன்ராமை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai