சுடச்சுட

  

  சத்துணவு பணியாளர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு கோரி ஆட்சியரிடம் மனு

  By கடலூர்  |   Published on : 21st December 2014 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சத்துணவு பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலமாக இடமாறுதல் அளிக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

  இச்சங்கத்தின் மாநில தலைவர் சீனுவாசன், மாவட்டத் தலைவர் எம்.பாலகிருஷ்ணன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

  அதில், சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சமையலர், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளித்திட வேண்டும், ஓய்வூதியத்தை கருவூலம் மூலமாக வழங்க வேண்டும்.

  வருடாந்திர ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவைத்தொகை, ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சிறப்பு சேமநல நிதி ஆகியவற்றை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

  அப்போது, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பரமசிவம், மாவட்டச் செயலர் ஆர்.உதயகுமார், சத்துணவு சொசைட்டி தலைவர் வைத்தியநாதன், பொறுப்பாளர் ரேணுகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai