சுடச்சுட

    

    திட்டக்குடி அடுத்த கண்டமத்தான் கிராமத்தில் நிறுத்தப்பட்ட முதியோர் ஓய்வூதியத் தொகையை வழங்கக் கோரி சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

    திட்டக்குடி வட்டம் கண்டமத்தான் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் முதியோர், விதவை, ஊனமுற்றோர் உள்ளிட்டோர் பல்வேறு உதவித் தொகை பெற்று வந்தனர்.

    இந்நிலையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுமார் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

    இதனையடுத்து உதவித் தொகை நிறுத்தப்பட்டதாக கூறப்படும் சுமார் 30 பேர் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் ரத்தினாவதியை சனிக்கிழமை சந்தித்தனர். அப்போது, மீண்டும் உதவித் தொகை வழங்கக் கோரி மனு அளித்தனர்.

    கிராமத்தில் மீண்டும் மறுஆய்வு செய்து தகுதியுடைய பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai