சுடச்சுட

  

  நெல்லுக்கு கூடுதல் விலை கோரி 31-ல் உண்ணாவிரதம்

  By சிதம்பரம்  |   Published on : 21st December 2014 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெல்லுக்கு கூடுதல் விலை வழங்கக்கோரி கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், வரும் 31-ஆம் தேதி காட்டுமன்னார்கோயிலில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

  காட்டுமன்னார்கோயில் தனியார் மண்டபத்தில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமை வகித்தார்.

  நிர்வாகிகள் வி.எஸ்.வைத்தியநாதசாமி, எம்.பாரதி, எம்.அன்பழகன், எல்.லட்சுமிகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.பழனிசாமி கருத்துரையாற்றினார். ஜி.ஆசைதம்பி, முருகேசன், பாலமணி, ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜெயராமன், ஆர்.மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: விவசாயத் தொழிலாளர் கூலி உயர்வு, உரம், பூச்சி மருந்து, உழவு கூலி உயர்வு, அறுவடை இயந்திர வாடகை உயர்வு என ஆண்டுக்கு ஆண்டு விவசாயச் செலவு அதிகரித்துக்கொண்டே செல்வதால், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தது.

  ஆனால் சாதாரண நெல்லுக்கு ரூ.1,410-ம், சன்ன ரகத்துக்கு ரூ.1,470-ம் வழங்க அரசு முன்வந்துள்ளது. இதில் மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ.50 மட்டுமே. எனவே நெல் குவிண்டாலுக்கு ரூ.3,000 வழங்கிடவும், மாநில அரசின் பங்காக ஊக்கத் தொகையாக ரூ.500 வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வரும் 31-ஆம் தேதி காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  தனியார் வியாபாரிகள் 61 கிலோவிற்கு பதிலாக 65 கிலோவிற்கு மேல் கொள்முதல் செய்கின்றனர். எனவே தமிழக அரசு தனியார் நெல் வியாபாரிகளை கண்காணித்து, 61 கிலோவிற்கு மேல் மூட்டை எடுக்கும் வியாபாரிகளின் தராசுகளை பறிமுதல் செய்ய வேண்டும். கூடுதல் எடையில் நெல் மூட்டைகள் இருந்தால் அரிசி ஆலைக்கு சீல் வைக்க வேண்டும் என அரசை கோருவது. அரவை இயந்திரங்கள் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். வீராணம் ஏரி தூர்வார ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai