Enable Javscript for better performance
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்

    By கடலூர்  |   Published on : 21st December 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திட்டக்குடி பேருந்து நிலையத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு கோரி சனிக்கிழமை துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர்.

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம், ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களில் உள்ள சிக்கல்களை தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

    இக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி அனைத்துத் தொழிற்சங்கங்களும் விரைவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. இதற்காக பொதுமக்களிடம் ஆதரவு கோரி, தங்கள் தரப்பு நியாயத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் துண்டுப் பிரசுரம் விநியோகித்து வருகின்றனர்.

    அதன்படி, திட்டக்குடி பேருந்து நிலையத்தில் தொமுச துணைத்தலைவர் தங்கராசு, பாட்டாளி தொழிற்சங்க துணைச் செயலாளர் ரவி, டி.எம்.டி.எஸ். துணைத் தலைவர் பெரியசாமி, எல்.எல்.எல்.எப். பொதுச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்கள் வழங்கினர். இதில், தொமுச நிர்வாகிகள் சின்னத்துரை, பெருமாள் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai