சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

  இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாரத ஸ்டேட் வங்கி பொதுத்தேர்வு மூலமாக 6,425 கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோன்று, பிஎஸ்என்எல் இளநிலை கணக்கு அலுவலர் காலிப்பணியிடத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், வங்கிப் பணிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருப்பதோடு, 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்கலாம். வயது வரம்பு சலுகையும் உண்டு.

  பிஎஸ்என்எல் பணிக்கு எம்.காம். பட்டம் பெற்றிருக்க வேண்டும். 20 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  இத்தேர்வு எழுதவுள்ளவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரையில் பயிற்சி வகுப்பு நடைபெறும். எனவே, விருப்பமுள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai