சுடச்சுட

  

  மருத்துவமனையில் கர்ப்பிணி சாவு: அதிகாரி விசாரணை

  By கடலூர்  |   Published on : 21st December 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி இறந்தது குறித்து மருத்துவ அதிகாரி சனிக்கிழமை விசாரணை நடத்தினார்.

  கடலூர் முதுநகர் வீட்டுவசதிவாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ரவி(37). எலக்ட்ரீசியனான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சீதா(30). இவர்களுக்கு லோகேஸ்வரி(7) என்ற மகள் உள்ளார்.

  இந்நிலையில், கர்ப்பிணியான சீதாவிற்கு 22-ஆம் தேதி (திங்கள்கிழமை) குழந்தை பிறக்குமென கண்ணாரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் தெரிவித்ததோடு, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

  அதன்படி, சீதா வெள்ளிக்கிழமை மாலையில் மருத்துவமனைக்குச் சென்ற போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்படவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  அப்போது, அவருக்கு வலிப்பு ஏற்படவே கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சீதா உயிரிழந்தார். வயிற்றிலிருந்த குழந்தையும் இறந்தது.

  இந்தச் சம்பவம் குறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஜவஹர், அண்ணாமலைப் பல்கலைக்கழக மகப்பேறு துறை பேராசிரியர் அண்ணாமலை ஆகியோர் சனிக்கிழமை கண்ணாரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கடலூர் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai