சுடச்சுட

    

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாடு இன்று தொடக்கம்

    By கடலூர்,  |   Published on : 21st December 2014 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) நெய்வேலியில் தொடங்குகிறது.

    இம்மாநாட்டை தொடங்கி வைத்து மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசுகிறார். 3 ஆண்டு வேலை அறிக்கையை மாவட்ட செயலர் டி.ஆறுமுகம் சமர்ப்பிக்கிறார்.

    டிசம்பர் 22-ம் தேதி மாநாட்டு பிரதிநிதிகள் விவாதம் நடைபெறுகிறது. டிசம்பர் 23-ம் தேதி புதிய மாவட்டக்குழு நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகிறது. மாநிலச்செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகிறார்.

    மாலையில் நெய்வேலி புதுக்குப்பம் ரவுண்டானாவிலிருந்து பேரணி புறப்பட்டு பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடை அருகே நிறைவு பெறுகிறது.

    இந்தத் தகவலை கட்சியின் மாவட்டச் செயலர் டி. ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai