சுடச்சுட

  

  தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், பண்ருட்டி ஒன்றியம் அழகப்பசமுத்திரம் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் 27 பேருக்கு, தனிநபர் கடனாக ரூ.1.45 லட்சம் நிதி உதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

  இதற்கான விழா, அழகப்ப சமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். காடாம்புலியூர் பகுதி அலுவலக அணித் தலைவர் ஆனந்தி முன்னிலை வகித்தார். வறுமை ஒழிப்பு சங்கச் செயலர் மேரிபுளோரா வரவேற்றார். மகளிர் திட்ட இயக்குநர் பு.காஞ்சனா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாற்றுத் திறனாளிகள் 16 பேருக்கும், நலிவுற்றவர்கள் 11 பேருக்கும் தனிநபர் கடனாக மொத்தம் ரூ.1.45 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பெட்டிக்கடை, இட்லிக் கடை, தையல் கடை உள்ளிட்ட தொழில் தொடங்குவதற்கு வழங்கினார். சிறப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai