Enable Javscript for better performance
வசூல் பணத்துடன் இளைஞர் தலைமறைவு- Dinamani

சுடச்சுட

    

    வசூல் பணத்துடன் இளைஞர் தலைமறைவு

    By பண்ருட்டி  |   Published on : 21st December 2014 03:49 AM  |   அ+அ அ-   |    |  

    வசூல் பணத்துடன் தலைமறைவான இளைஞரை பண்ருட்டி போலீஸார் தேடி வருகின்றனர்.

    பண்ருட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (42). அன்னை இந்திரா காந்தி சாலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனையகம் நடத்தி வருகிறார். இவர் கடையில் திருக்கோயிலூர் சந்தைப்பேட்டைப் பகுதியை சேர்ந்த அழகிரி என்ற இளைஞர் வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த 14 மாதங்களாக வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த பணம் ரூ.3 லட்சத்துடன் தலைமறைவாகிவிட்டாராம்.

    இதுகுறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai