சுடச்சுட

  

  வெள்ளை, மஞ்சள் நிற குடும்ப அட்டைகளிலும் உள்தாள் ஒட்ட வேண்டும்: ஆட்சியர்

  By கடலூர்  |   Published on : 21st December 2014 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வெள்ளை, மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களும் கண்டிப்பாக உள்தாள் ஒட்ட வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் கால நீட்டிப்பு செய்யப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு 2015-ஆம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.

  எப்பொருளும் வேண்டாதோருக்கு வழங்கப்பட்ட வெள்ளை நிறமுடைய குடும்ப அட்டைதாரர்களும், இருப்பிட முகவரி ஆதாரத்துக்காக தட்கல் முறையில் வழங்கப்பட்டுள்ள மஞ்சள் நிறமுடைய குடும்ப அட்டைதாரர்களும் புதுப்பித்துக்கொள்வதற்கு ஏதுவாக இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

  ஜ்ஜ்ஜ்.ஸ்ரீர்ய்ள்ன்ம்ங்ழ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் சென்று காலநீட்டிப்பு பதிவுச்சீட்டை பெற்று, அதனை மேற்கூரிய குடும்ப அட்டைகளில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

  இத்தகைய காலநீட்டிப்பு பதிவுச்சீட்டு ஒட்டப்பட்டுள்ள குடும்ப அட்டைகள் நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகளாக கருதப்படும். இணையதள வசதியை பயன்படுத்த இயலாத குடும்ப அட்டைதாரர்கள் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் மாதந்தோறும் நடத்தப்படும் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டத்தில் தங்களுடைய குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளலாம்.

  இதனை குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai