சுடச்சுட

  

  அம்பேத்கர் பெலோஷிப் விருதாளர்களுக்குப் பாராட்டு

  By கடலூர்  |   Published on : 22nd December 2014 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மங்களூர் ஒன்றியத்தில் கல்வி மற்றும் சமுதாயப் பணியில் சிறப்பாகப் பணியாற்றி அம்பேத்கர் பெலோஷிப் விருது பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

  புதுதில்லி பாரதிய தலித் சாகித்ய அகாதெமி சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு அம்பேத்கர் பெலோஷிப் விருது வழங்கப்பட்டு வருகிறது.

  நடப்பு ஆண்டில் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் ம.புடையூர் சிவராஜ், எழுத்தூர் விஜயபாஸ்கர், புலிவலம் கோபிநாத், ஊராட்சி மன்றத் தலைவர்கள் வேங்காயிதனவேல் (ம.புடையூர்), மலர்கொடிகரும்பாயிரம் (கீழக்கல்பூண்டி), மாரிமுத்து (ஆவட்டி), வட்டார வளர்ச்சி அலுவலக சுகாதார ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், ஆசிரியர் கூட்டுறவு சிக்கன கடன் சங்கச் செயலர் கருப்பையா ஆகியோர் அம்பேத்கர் பெலோஷிப் விருதுக்கு தேர்வாகினர்.

  புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் அகாதெமியின் அகில இந்திய பொதுச்செயலர் சுமனேஸ்கர், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இவ்விருதினை வழங்கி, பாராட்டினார். விருது பெற்றவர்களை மங்களூர் வட்டார ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai