சுடச்சுட

  

  ஆஞ்சநேயர் ஜயந்தியை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்திலுள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

  திருப்பாதிரிபுலியூர் வரதராஜப்பெருமாள் கோயிலில் காலையில் சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத கோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் ஆஞ்சநேயருக்கு 10,008 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

  திட்டக்குடி பக்த ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆஞ்சநேயருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து ஸஹஸ்ர நாமாவளி அர்ச்சனையும், வெள்ளிகவச அலங்காரம், வெண்ணைய் அலங்காரம், சயனபால் அபிஷேகமும் நடைபெற்றன.

  பண்ருட்டி: இதேபோல் பண்ருட்டி மற்றும் திருவதிகையில் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் ஆஞ்சநேயர் ஜயந்தி விழா நடைபெற்றது.

  பண்ருட்டி காந்தி சாலையில் உள்ள வரதராஜ பெருமாள், திருவதிகை அரங்கநாத பெருமாள், சரநாராயணப் பெருமாள் கோயில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கும், திருவதிகை ஆஞ்சநேயர், மணி நகரில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. பின்னர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அனுமன் காட்சி அளித்தார். மேலும், மணி நகர் ஆஞ்சநேயர் கோயில் உற்சவர் வீதி உலா நடைபெற்றது.

  சிதம்பரம்: இதனிடையே சிதம்பரம் கீழரத வீதியில் உள்ள வீரசக்தி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன.

  பின்னர் சுமார் 1,000 பேருக்கு அன்னாதானம் வழங்கப்பட்டது. மாலை வீரசக்தி ஆஞ்சநேயர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள கோதண்டராமர் கோயில், தில்லைக்கோவிந்தராஜா பெருமாள் கோயில் ஆகியவற்றில்லுள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

  தனுர் மாத அமாவாசையும், ஆஞ்சநேயர் ஜயந்தியும் ஞாயிற்றுக்கிழமை ஒன்றிணைந்து வந்ததால், பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai