சுடச்சுட

    

    திட்டக்குடி அருகே உள்ள இடைச்செருவல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு, தப்பி ஓடியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    ஆவத்தி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரகாஷ்(23). இவர், தனது நண்பர் பாரத் என்பவருடன் இடைச்செருவலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, இடைச்செருவல் கிராமத்திலுள்ள மாமனார் வீட்டுக்கு வந்திருந்த ஆ.ராஜூ என்பவர் குடிபோதையில், பிரகாஷ் மற்றும் அவரது நண்பரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைத்தட்டிக்கேட்ட பிரகாஷை கத்தியால் குத்தி விட்டு ராஜூ தப்பியோடிவிட்டார்.

    இதில் காயமுற்ற பிரகாஷ் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து திட்டக்குடி காவல் ஆய்வாளர் சுதாகர், உதவி ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai