சுடச்சுட

    

    ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்கக் கோரிக்கை

    By கடலூர்,  |   Published on : 22nd December 2014 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓய்வூதியர்களுக்கு கருவூலம் மூலமாக அடையாள அட்டை வழங்க வேண்டும் என தமிழக ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திட்டக்குடியில் தமிழக ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சிறப்புத் தலைவர் தமிழ்பெருவளத்தான் முன்னிலை வகித்தார். பொருளர் கலாமணி ஆண்டறிக்கை வாசித்தார். துணைத் தலைவர்கள் சாந்தப்பன், பிச்சமணி, தணிக்கையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தீர்மானங்களை வலியுறுத்திப் பேசினர்.

    கூட்டத்தில், கடலூரில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்பது, ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற ரூ.2 லட்சம் வரை அனுமதிக்க வேண்டும், கருவூலத்துறை மூலம் ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலர் பன்னீர்செல்வம் வரவேற்க, தலைமையிடத்துச் செயலர் துரைராசு நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai