சுடச்சுட

  

  கடலூர் மண்டலத்துக்கான கோ-ஆப் டெக்ஸ் விற்பனை இலக்கு ரூ.37.50 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோ-ஆப் டெக்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் த.ராமலிங்கம் கூறினார்.

  கோ-ஆப்டெக்ஸ் கடலூர் மண்டலத்தின் முல்லை விற்பனை நிலையத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விற்பனை தொடக்க விழா கடலூரில் அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் த.ராமலிங்கம் தலைமை வகித்தார். தூய எபிபெனி ஆலய ஆயர் ஏ.அருண் ஜெபஸ் ஆல்பர்ட், தென்னிந்திய திருச்சபை ஆயர் சாலமன் சவுந்தரதாஸ், சி.எஸ்.ஐ. ஆயர் அருள்தியோப்லஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தனர். மண்டல மேலாளர் சூரியநாராயணசாமி தங்க மழைத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தங்கக் காசுகளை வழங்கிப் பேசினார்.

  நிர்வாகக்குழு உறுப்பினர் த.ராமலிங்கம் பேசியதாவது:

  கடலூர் மண்டலத்தில் கடந்தாண்டு ரூ.22 கோடி விற்பனை இலக்கு நிர்ணம் செய்யப்பட்டது. இதில் பொங்கல் விற்பனை ரூ.5 கோடி இலக்காக இருந்தது.

  இந்தாண்டு ரூ.37.50 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகை விற்பனை இலக்காக

  ரூ.7 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி 30 சதவீம் சிறப்பு தள்ளுபடி வரும் ஜனவரி 25-ஆம் தேதி வரை உள்ளது. இந்தாண்டு மகளிருக்காக ஜெயகார்த்திகா சேலைகளும், ஆண்களுக்கு 100 சதவீத பட்டு சட்டைகள் மற்றும் காட்டன் சட்டைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  மேலும், கடந்தாண்டு 2,000 ரூபாய்க்கு துணி வாங்கியவர்களுக்கு சிறப்பு குலுக்களில் தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. இந்தாண்டு முதல் பரிசாக 4 கிராம் தங்கம் 10 பேருக்கும், தலா 2 கிராம் தங்கம் 30 பேருக்கு பரிசாக வழங்கப்பட உள்ளது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai