சுடச்சுட

  

  சடலத்தைப் புதைப்பதில் மோதல்: சாலை மறியல் செய்த 23 பெண்கள் கைது

  By பண்ருட்டி  |   Published on : 22nd December 2014 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பண்ருட்டி அருகே இறந்தவரின் சடலத்தை புதைப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீஸாரை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 23 பெண்களை பண்ருட்டி போலீஸார் கைது செய்தனர்.

  பண்ருட்டியை அடுத்துள்ள மேட்டாமேடு-பணப்பாக்கம் எல்லையில் அரசு புறம்போக்கு வாய்க்கால் உள்ளது. பணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர் அந்த வாய்க்காலை ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

  இந்த இடத்தில் மேட்டாமேடு பகுதியில் இறந்த ஒருவரின் சடலத்தை புதைக்க அப்பகுதியினர் சனிக்கிழமை சென்றுள்ளனர். இதற்கு மனோகரன் மற்றும் பணப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விவசாய செய்யும் இடத்தில் சடலத்தை புதைக்க விடமாட்டோம் என்று தடுத்தனராம்.

  இதனால் ஆத்திரம் அடைந்த மேட்டாமேடு பகுதியினர் மனோகரன் மற்றும் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை தாக்கினராம். இதனால் படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மேட்டாமேடு பகுதியை சேர்ந்த சிலரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

  மேலும், இந்த வழக்கு தொடர்பாக பணப்பாக்கம் காலனியைச் சேர்ந்த மருதவேல், ஆதிமூலம், கார்த்திகேயன், கந்தவேல், சுரேஷ், சிவக்கொழுந்து உள்ளிட்ட 6 பேரை விசாரணைக்காக போலீஸார் அழைத்து சென்றுள்ளனர்.

  இதனால் ஆத்திரம் அடைந்த பணப்பாக்கம் காலனி பெண்கள் 23 பேர் இராசாப்பாளையம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை பண்ருட்டி போலீஸார் கைது செய்தனர். மறியலால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai