Enable Javscript for better performance
சிப்காட்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    சிப்காட்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க வலியுறுத்தல்

    By கடலூர்  |   Published on : 22nd December 2014 03:48 AM  |   அ+அ அ-   |    |  

    கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளால் உறிஞ்சப்படும் நீரால் தொண்டமாநத்தம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 300 ஏக்கர் நில விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் அளிக்க வேண்டுமென வன்னியர் பாதுகாப்பு பேரவை வலியுறுத்தியுள்ளது.

    குறிஞ்சிப்பாடி ஒன்றிய வன்னியர் பாதுகாப்புப் பேரவை ஆலோசனைக் கூட்டம் சேடப்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு டி.ஜெ.கலியபெருமாள் தலைமை வகித்தார். கே.பாவாடைசாமி, கே.சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவனத் தலைவர் கே.ராஜூ, இதர பிற்படுத்தப்பட்டோர் பேரவை அகில இந்திய பொதுச் செயலர் வீரவன்னியராஜா, புதுவை மாநில தலைவர் இரா.துளசிதாசன் உள்ளிட்டோர் பேசினர்.

    கூட்டத்தில், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாவட்ட செயலர் டி.எஸ்.அசோக்குமார், மாநில நிர்வாகிகள் எம்.பொன்னிரவி, வி.மணிஇந்திரஜித், இ.குலசேகர ஆழ்வார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்.சின்னதம்பி வரவேற்க, மகளிரணி தலைவி எம்.தமிழரசி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai