சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வரும் ஜனவரி 8, 9-ஆம் தேதிகளில் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

  ரோட்டரி சங்கம், டாக்டர் சபாநாயகம் நினைவு அறக்கட்டளை மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்துகின்றன. பெண்களுக்கான இலவச கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் முன்னறிதல் பரிசோதனை குறித்த இந்த முகாம், 8,9-ஆம் தேதிகளில் (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை) நடைபெறுகிறது.

  35 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களும் பங்கேற்று பரிசோதனை செய்து கொள்ளலாம். இலவச பரிசோதனைக்கு ஜனவரி 5-ஆம் தேதிக்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முதலில் பதிவு செய்யும் 200 பேர் மட்டுமே பரிசோதனைக்கு அனுமதிக்கப்படுவர்.

  முன்பதிவு செய்ய வேண்டிய இடங்கள்: அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தெற்குவீதியில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நகர்ப்புற மையம், அரசு மருத்துவமனை, தெற்குவீதி டாக்டர் ஞானமணி மருத்துவமனை, வடக்குவீதி கண்ணா ஆர்த்தோ கிளினிக், தெற்குவீதி டாக்டர் பழநிசுவாமிநாதன் மருத்துவமனை, நெல்லுக்கடைத்தெரு முபாரக் ஜூவல்லரி, மேலவீதி செந்தில் ஞானவேல் சிட்பண்ட்ஸ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai