சுடச்சுட

  

  நெல்லிக்குப்பத்தில் தொடர் திருட்டு: மக்கள் அச்சம்

  By பண்ருட்டி  |   Published on : 22nd December 2014 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

  நெல்லிக்குப்பம் நகரில் அண்மைக் காலமாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

  இங்குள்ள ஏ.குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி (72). இவர் தனது குடும்பத்துடன் சனிக்கிழமை வெளியே சென்றிருந்த போது மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து காலி சிலிண்டரை திருடிச் சென்றனர்.

  தங்க நகை திருட்டு: இதேபோல் கோண்டூர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன்(67), கடந்த 10.10.14 முதல் 12.10.14 வரையில் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுள்ளார். இச்சமயத்தில் வீட்டின் மாடி கதவை திறந்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், 2 சவரன் தங்க நகை, வீட்டு உபயோகப் பொருள்கள், பூஜைப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.

  மடிக்கணினி திருட்டு: கோண்டூர் சாய்பாபா நகரைச் சேர்ந்தவர் ஆசிரியர் தமிழ்தாசன்(53). இவரது மனைவியும் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் 25.9.2014 அன்று பள்ளிக்கு சென்றிருந்த நேரத்தில், மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த மடிக்கணினியை திருடிச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மூவரும் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தொடர் திருட்டின் காரணமாக நெல்லிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருட்டு குறித்து புகார் அளித்தால் காவல் நிலையத்தில் வழக்கு பதிவதில் காலதாமதம் செய்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

  மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai