சுடச்சுட

  

  பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி

  By சிதம்பரம்,  |   Published on : 22nd December 2014 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பயிற்சியில் 642 பேர் பங்கேற்றனர்.

  இரு கட்டங்களாக டிசம்பர் 15 முதல் 20-ஆம் தேதி வரை 3 நாள்கள் இந்தப் பயிற்சி நடைபெற்றது. சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு, வடக்குவீதி, சம்பந்தக்காரத்தெரு, மானாசந்து, வல்லம்படுகை, குமராட்சி மற்றும் லால்பேட்டை ஆகிய மையங்களில் நடைபெற்ற இப்பயிற்சியினை வட்டார வளமைய (பொறுப்பு) மேற்பார்வையாளர் ரா.பாலமுருகன், உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பா.மோகன் மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்துப் பேசினர்.

  அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 107 பள்ளிகளைச் சேர்ந்த 642 உறுப்பினர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு இந்தியாவில் கல்வி உரிமை வரலாறு, குழந்தைகளின் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் கடமைகள் மற்றும் பணிகள், பள்ளி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் க.வெங்கடேசன் பயிற்சி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

  மங்களூர் ஒன்றியம்: இதனிடையே மங்களூர் ஒன்றியத்தில் உள்ள 138 பள்ளிகளில் உள்ள மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

  இடைச்செருவாய் வட்டார வளமையத்தில் நடைபெற்ற முகாமுக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் நிலச்சந்திரன் தலைமை வகித்தார்.

  தலைமை ஆசிரியர்கள் சுப்பிரமணியன், பொன் சாமி, பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தொடக்க கல்வி அலுவலர் கலைசெல்வி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் விமலா ஆகியோர் பயிற்சி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

  பயிற்சி முகாமில் 373 ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai