சுடச்சுட

  

  மணிலாவில் திரட்சியான கடலையை பெற ஜிப்சம் இட வேண்டும்

  By கடலூர்,  |   Published on : 22nd December 2014 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மணிலாவில் திரட்சியான கடலையைப் பெற சுண்ணாம்புச்சத்து மற்றும் கந்தகச்சத்து உள்ள ஜிப்சத்தை இட வேண்டுமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  மணிலாவின் மகசூல் கடலையின் திரட்சியையும், எண்ணிக்கையையும் பொருத்தே அமைகிறது. ஒரு மணிலா செடியில் சராசரியாக 100 பூக்கள் பூத்து அதில் 60 விழுதுகளாகி மண்ணில் பதிகின்றன. அவற்றிள் 30 மட்டுமே முற்றிய கடலைகளாக உருவாகிறது.

  மணிலா செடிகளில் பொக்கில்லாத, திரட்சியான கடலையைப் பெற ஜிப்சம் இட்டு மண்ணை அணைக்க வேண்டும்.

  திரட்சியான கடலையைப் பெறவும், வேர் முடிச்சுகளை உருவாக்கவும் சுண்ணாம்பு சத்து தேவைப்படுகிறது. இதேபோல் எண்ணெய்ச்சத்தை அதிகரிக்க கந்தக சத்து தேவைப்படுகிறது. இவை இரண்டும் ஜிப்சத்தில் இருப்பதால், விவசாயிகள் மணிலாவுக்கு ஜிப்சத்தை இடுவது மிக, மிக அவசியம்.

  மற்ற எந்தப்பயிருக்கும் இல்லாத தனிச்சிறப்பு மணிலாவுக்கு உள்ளது. அதாவது பூவிலிருந்து உருவாகும் விழுதுகள் நிலத்தில் புகுந்து நேரடியாக சத்துக்களை எடுத்துக் கொள்ளும் திறன் உள்ளது. எனவே, விதைத்த 45-வது நாளில் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் மண்ணில் இட்டு, மண்ணை அணைப்பதால் அது இளகி அதிகளவு விழுதுகள் சிரமமின்றி நிலத்தில் இறங்கி, தனக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து, கந்தகச்சத்தை எடுத்துக்கொண்டு திரட்சியான கடலையாக மாறும். இதன்மூலம் மகத்தான மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் ஜிப்சம் இட்டு மண்ணை அணைக்க வேண்டுமென கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் பொ.ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai