சுடச்சுட

  

  இளைஞர் கொலை வழக்கு:கைது செய்யப்பட்டவருக்கு போலீஸ் காவல்

  By விருத்தாசலம்,  |   Published on : 23rd December 2014 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னை தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவரை விருத்தாசலம் போலீஸார் திங்கள்கிழமை 3 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

  கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்துக்கு உள்பட்ட வெள்ளைப்பாறை ஓடைப் பகுதியில் கடந்த 14-ம் தேதி 3 சூட்கேஸ்களில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன பாதுகாப்பு கண்காணிப்பாளர் வெங்கட்ராவ் (30) என்பவரின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது. இதுதொடர்பாக போலீஸார் வெங்கட்ராவின் நண்பரான வேல்முருகன் (31) என்பவரை கைது செய்து டிசம்பர் 16-ம் தேதி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

  பின்னர், வேல்முருகனை விருத்தாசலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பழனிவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது, வேல்முருகனை கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் வேல்முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க விருத்தாசலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் மனு தாக்கல் செய்தனர்.

  மனுவை விசாரித்த நீதிபதி பழனிவேல் 3 நாள்கள் காவலில் விசாரிக்க அனுமதியளித்தார். இதைத் தொடர்ந்து விருத்தாசலம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் வேல்முருகனை விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai