சுடச்சுட

    

    திட்டக்குடி அருகே மினி லாரி ஓடையில்கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம், எறும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (38). மினி லாரி ஓட்டுநர். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி மினி லாரியை ஓட்டிச் சென்றார்.

    தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் பகுதியில் வந்தபோது மினி லாரியின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி அருகில் இருந்த ஓடையில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் முனுசாமி ஓடைத் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    இந்தச் சம்பவம் குறித்து அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டுநர்கள் வேப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஆய்வாளர் சுப்புராயுலு மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று முனுசாமி உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை

    மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai