சுடச்சுட

  

  கடலூர்-புதுவை இருப்புப் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

  By கடலூர்,  |   Published on : 23rd December 2014 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர்-புதுவை இடையிலான இருப்புப் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட மாநாடு நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திங்கள்கிழமை 2-வது நாள் மாநாட்டு நிகழ்ச்சியில் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

  மாநாட்டில், கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகளைத் தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். மத்திய அரசு வேலை நியமன தடை உத்தரவை அகற்றி என்எல்சி நிறுவனத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், என்எல்சிக்கு நிலம் கொடுத்தோருக்கு நிரந்தர வேலை, ஏக்கருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

  கடலூர் துறைமுகத்தை ஆழப்படுத்தி, கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும்.

  மாவட்டத்தில் மிகவும் மோசமாகவும் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பச்சையாங்குப்பம் மேம்பாலப் பணியை விரைவாக முடிக்க வேண்டும்.

  கிடப்பில் கிடக்கும் திட்டமான புதுவை, கடலூர் இடையேயான இருப்புப் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

  மக்கள்தொகை கணக்குப்படி மாவட்டத்தில் 130 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்க வேண்டும். ஆனால், 58 சுகாதார நிலையங்கள் மட்டுமே உள்ளன. 520 துணை சுகாதார நிலையங்கள் இருக்க வேண்டிய இடத்தில் 319 மட்டுமே உள்ளன.

  சுகாதார நிலையங்களை அதிகப்படுத்துவதுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து, 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுத்து சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

  மேலும், மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும், விவசாயப் பொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க நடவடிக்கை, ஏரி குளங்கள் தூர்வாருதல், வீடில்லாதவர்களுக்கு மனைப் பட்டா வழங்குதல், புதிய கல்வி நிலையங்கள் திறப்பது, சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துதல், வனத் துறைக்குச் சொந்தமான 25 ஆயிரம் ஏக்கர் பரப்பு முந்திரிக் காடுகளை ஏழைகளுக்கு வழங்கக் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai