சுடச்சுட

    

    கெடிலம் ஆற்று தடுப்பணையில் செத்து மிதந்த மீன்கள்

    By கடலூர்  |   Published on : 23rd December 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூரில் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் திங்கள்கிழமை ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.

    கடலூர் வழியாகச் செல்லும் கெடிலம் ஆற்றில் கம்மியம்பேட்டை அருகே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணை கடல்நீர் ஆற்று நீரோடு கலப்பதை தடுப்பதற்கும், கம்மியம்பேட்டை, செம்மண்டலம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காகவும் அமைக்கப்பட்டது. தடுப்பணை கட்டிய பின்னர், தடுப்பணையில் தேங்கிய நீரால் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.

    எனினும், நெல்லிக்குப்பத்தில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலையின் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் கெடிலம் ஆற்றில் கலக்கப்பட்டு தடுப்பணையில் தேங்குகிறது. இதனால், அணையின் நீரின் தன்மை கெட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் தடுப்பணைக்குச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தடுப்பணை கரையோரங்களில் ஆங்காங்கே சிறியது முதல் பெரிய அளவிலான மீன்கள் செத்து மிதந்தன. சிறிது,நேரத்துக்குப் பின்னர் மீன்களிடமிருந்து அழுகிய நாற்றம் வீசியது.

    ஆலையில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் விடப்பட்டதே மீன்களின் இறப்புக்கும், தடுப்பணை நீர் சாக்கடையாக மாறி வருவதற்கும் காரணம் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai