சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் கடலூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  தமிழ்நாடு கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தினக்கூலித் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக அரசால் அமைக்கப்பட்ட ராஜிரங்கன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேத்தியாதோப்பில் உள்ள எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் கடந்த 12 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இக்கோரிக்கைகளை வலியுறுத்தி 13-வது நாளான திங்கள்கிழமை, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர் முழுக்க ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

  ஆர்ப்பாட்டத்துக்கு ஊழியர் பேரவை பொதுச்செயலர் என்.வேலவன் தலைமை வகித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் ம.செ.சிந்தனைச்செல்வன், மாவட்டச் செயலர் பா.தாமரைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் டி.மணிவாசகம் உள்ளிட்டோர் பேசினர்.

  ஆலையின் தொமுச தலைவர் எஸ்.வேல்முருகன், ஐஎன்டியுசி பொதுச்செயலர் எஸ்.செல்வராஜ், பா.தொ.ச. செயலர் வெற்றிச்செல்வன், ஏஐடியுசி தலைவர் முத்துகுமாரசாமி, எம்எல்எப் தலைவர் தில்லைநடராஜன், தொ.வி.மு. தலைவர் பொ.வெங்கடேசன், அலுவலக பணியாளர் சங்கத் தலைவர் இளங்கோ, கரும்பு உதவியாளர்கள் சங்கச் செயலர் அண்ணாதுரை மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு

  நடவடிக்கைக் குழுவினர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai