சுடச்சுட

  

  மார்கழி மாத அமாவாசையையொட்டி சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோயிலில், தில்லைக் காளிக்கு மகாபிஷேகம் மற்றும் 163-வது சிறப்பு அர்த்தசாம பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

  மேலும், கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், பிரம்மசாமுண்டி சன்னதிகளில் நெய் தீப ஆராதனையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

  இதைத்தொடர்ந்து தில்லைக் காளிக்கு குடம், குடமாக நல்லெண்ணெய் அபிஷேகமும், தைலக்காப்பு, குங்குமக் காப்பு ஆகியவை செய்யப்பட்டு, வாசனைத் திரவியம், வெட்டிவேர், விலாமிச்சு வேர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

  இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்புப் பூஜைக்கான ஏற்பாடுகளை அமாவாசை அர்த்தசாம அபிஷேக மண்டலி நிர்வாகி எஸ்.வைத்தியநாதன் மறறும் பக்தர்கள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai