Enable Javscript for better performance
தென்னை மரத்தால் சேதமடையும் கருவூலக் கட்டடம்- Dinamani

சுடச்சுட

    

    தென்னை மரத்தால் சேதமடையும் கருவூலக் கட்டடம்

    By பண்ருட்டி  |   Published on : 23rd December 2014 03:37 AM  |   அ+அ அ-   |    |  

    பண்ருட்டி காவல் நிலைய வளாகத்தில் உள்ள தென்னை மரத்தால் கருவூலக் கட்டடம் சேதம் அடைந்துள்ளது.

    பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் காவல் நிலையம், பத்திரப் பதிவு அலுவலகம், பொதுப்பணித் துறை நீர் ஆதார அமைப்பு அலுவலகம், கருவூலம் உள்ளிட்ட அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன.

    சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பத்திரப் பதிவு அலுவலகம், காவல் நிலையம், கருவூல கட்டடங்கள் பழுதடைந்து மழைக் காலத்தில் ஒழுகுவதால் ஆவணங்களைப் பாதுகாக்க காவலர்கள் மற்றும்

    கருவூல ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். அண்மையில் இவை புதுப்பிக்கப்பட்டும் பயனில்லை எனக் கூறுகிறனர்.

    இந்நிலையில் காவல் நிலையத்தின் வளாகத்தில் உள்ள தென்னை மரம், கருவூல கட்டடத்தின் பின் பகுதியின் மிக அருகில் அமைந்துள்ளது. இதனால், தென்னை மரத்தின் காய், மட்டைகள் விழுந்து கருவூலக கட்டட ஓடுகள் சேதம் அடைந்துள்ளன. ஒவ்வொரு முறையும் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஓடுகளை மாற்றினாலும் திரும்பவும் சேதம் அடைவதுடன் மழைக் காலத்தில் ஒழுகவும் செய்கிறதாம்.

    எனவே, கருவூலத்தின் ஆவணங்களை பாதுகாக்கவும், அரசு பணம் விரயமாவதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai