சுடச்சுட

  

  பள்ளி, அரசு அலுவலகங்களுக்கு பிரதமர் மோடி புகைப்படம்

  By கடலூர்,  |   Published on : 23rd December 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திட்டக்குடியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி உபகரணங்கள் வழங்கியும், பிரதமர் மோடியின் படங்களை அரசு அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் திறந்து வைத்தும் பாஜகவினர் கொண்டாடினர்.

  முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினம் டிசம்பர் 25 ஆகும். இதனை முன்னிட்டு திட்டக்குடி ஒன்றிய பாஜக சார்பில் வாஜ்பாய் பிறந்த தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

  திட்டக்குடி அரசு திருவள்ளுவர் கலை, அறிவியல் கல்லூரி, அரசு தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, பேரூராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்பட அரசு அலுவலகங்களுக்கு கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்களை வழங்கினர். மேலும், மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

  நிகழ்ச்சிக்கு பாஜக ஒன்றியத் தலைவர் பொன்.பெரியசாமி தலைமை வகித்தார்.

  மாவட்டத் தலைவர் சுகுமாறன், துணைத் தலைவர் ராமஆதிமூலம் முன்னிலை வகித்தனர்.

  இடைச்செருவாய் பழனிவேல் படங்களை வழங்கிப் பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் நரேந்திரன், ஒன்றிய பொதுச்செயலாளர் அய்யப்பன் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai