Enable Javscript for better performance
மயானக் கொட்டகை அமைக்க நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்- Dinamani

சுடச்சுட

    

    மயானக் கொட்டகை அமைக்க நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்

    By பண்ருட்டி  |   Published on : 23rd December 2014 03:40 AM  |   அ+அ அ-   |    |  

    மயானக் கொட்டகைக்கு மேற்கூரை அமைப்பது மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற ரூ.1.25 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு, பண்ருட்டி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பண்ருட்டி நகராட்சியின் சாதாரண கூட்டம் மன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம்:

    வடிவேலன்: கடலூர் சாலை திருவதிகையில் பெட்ரோல் பங்க் அமைத்தால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும். எனவே, மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்கக்கூடாது என கடந்த 3.9.2014 நகர்மன்றக் கூட்டத்தில் கூறினேன்.

    அப்பகுதி மக்களும் அமைக்கக்கூடாது என ஆட்சியரிடம் கடிதம் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், எதிர்ப்பை மீறி பெட்ரோல் பங்க் அமைக்க அனுமதி அளித்துள்ளனர். இதை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பி.பன்னீர்செல்வம் (தலைவர்):சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளும் பட்சத்தில் நகராட்சி உறுதுணையாக இருக்கும்.

    கூட்டத்தில், திருவதிகையில் மயானக் கொட்டகை மற்றும் ஆக்கிரமிப்பு அகற்ற ரூ.1.25 லட்சம் திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில், கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai