சுடச்சுட

    

    விருத்தாசலம் அருகே தொரவளூர் கிராமத்தில், அணைக்கட்டு வாய்க்காலில் திங்கள்கிழமை தூர்வாரும் பணி நடைபெற்றது.

    விருத்தாசலத்தை அடுத்த மேமாத்தூர் கிராமத்தில் மணிமுக்தாற்றில் அணைக்கட்டு உள்ளது. அணைக்கட்டிலிருந்து, பாசனத்துக்காக சுமார் 15 கிராம ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது.

    இந்நிலையில், அணைக்கட்டில் இருந்து செல்லும் முதன்மை வாய்க்காலில், பரவளூர் மற்றும் தொரவளூர் இடைப்பட்ட பகுதியில் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் செலவில் அணைக்கட்டு தூர்வாரும் பணி பொதுப்பணித் துறை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai