சுடச்சுட

  

  அனுமதியின்றி இயங்கிய 23 டாஸ்மாக் பார்களுக்கு சீல்

  By  கடலூர்  |   Published on : 24th December 2014 12:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கிய 23 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
   கடலூர் மாவட்டத்தில் சுமார் 235 அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. கடையுடன் இணைந்த பார் நடத்துவதற்காக விடப்பட்ட டெண்டரில் பெரும்பாலானவர்கள் பங்கேற்கவில்லை.
   இதனால், 57 பார்கள் மட்டுமே அரசு அனுமதி பெற்று இயங்குகின்றன. எனினும், பெரும்பாலான கடைகளில் பார்கள் இயங்கி வருவதாக புகார்கள் கூறப்பட்டன. இதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் எம்.ஜெயச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் அண்மையில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில், அதிகபட்சமாக கெங்கைகொண்டான் பகுதியில் 6 பார்களும், வடலூரில் 4 பார்களும் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரிய வந்தது. இதேப்போன்று கடலூர், சேடப்பாளையம், நெய்வேலி, விருத்தாசலம் பகுதிகளிலும் மொத்தம் 23 பார்கள் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
   இதையடுத்து அந்த பார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாவட்ட மேலாளர் பரிந்துரைத்தார். மேலும், 23 கடைகளையும் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலாளர் தெரிவித்தார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai