சுடச்சுட

  

  அன்னதானம் செய்வோர்  முன்பதிவு செய்ய  அறிவுறுத்தல்

  By  சிதம்பரம்,  |   Published on : 24th December 2014 12:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன திருவிழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புபவர்கள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியிடம் முன்பதிவு செய்ய வேண்டும் என கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி எம்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
   சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன தேர்த் திருவிழா மற்றும் தரிசன திருவிழா வருகிற ஜனவரி 4,5 தேதிகளில் நடைபெறுகிறது.
   இவ்விழாவில் அன்னதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதிபெற்ற பின், உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்ய சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் பத்மநாபனை அணுக வேண்டும். அவரது கைப்பேசி எண்: 97895 41853. மேலும் உணவு வணிகர்கள் அனைவரும் உணவை பாதுகாப்பான முறையில் தயார் செய்து வழங்க வேண்டும் என எம்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai