Enable Javscript for better performance
கண் சிகிச்சை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி அருகே விசூர் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
     தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பண்ருட்டி வட்டாரம், நகர கிளை, திருவண்ணாமலை ரமண மகரிஷி கண் மருத்துவமனை, கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்தின.
     ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் ச.ஜீவானந்தம் முகாமைத் தொடங்கி வைத்தார். புத்தன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
     நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பண்ருட்டி வட்டாரத் தலைவர் சி. அருள்பிரகாசன், செயலர் செü.நாராயணமூர்த்தி, நகரச் செயலர் ராதாகிருஷ்ணன், கடலூர் மாவட்ட அமைப்பின் சார்பாக தலைவர் இரா. அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     முகாமில், 170 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது, 18 பேர் விழிலென்ஸ் பொருத்தும் சிகிச்சைக்கு திருவண்ணாமலை ரமண மகரிஷி கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai