சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில் பொயனப்பாடி கிராமத்தில் மரம் நடும் விழா மற்றும் அவற்றை பாதுகாப்பது தொடர்பான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
   நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் உண்ணாமலை பெரியசாமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், சிறுப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, வனக்காவலர் செல்வராயர், ஒன்றியக் கவுன்சிலர் சம்பத்குமார் ஆகியோர் மரம் நடுதல் மற்றும் இயற்கையை பாதுகாப்பது குறித்து பேசினர். மேலும், பொயனப்பாடியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், இளையோர் மைய கணக்காளர் சக்கரவர்த்தி, சண்முகம், முனியமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai