சுடச்சுட

  

  கோயிலுக்கு நிர்வாக அதிகாரி  நியமிக்கக் கோரிக்கை

  By  சிதம்பரம்  |   Published on : 24th December 2014 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரத்தில் உள்ள அனந்தீஸ்வரர் கோயிலுக்கு தனி நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணியாளர்களை நியமிக்க வேண்டும் என முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சிவா.கண்ணதாசன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: சிதம்பரத்தில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரலாற்று புகழ்வாய்ந்த சிவன் கோயிலான ஸ்ரீஅனந்தீஸ்வரர் கோயில் உள்ளது. அதன் அறங்காவலராக நான் பணியாற்றி உள்ளேன்.
   தற்போது அக்கோயில் திருப்பணி முடிவுற்று வருகிற பிப்ரவரி 8-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட கோயிலுக்கு தனி நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டு கடந்த 2004 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றுச் சென்றார். அதன்பின்னர் வேறு அதிகாரி நியமிக்கப்படவில்லை.
   தற்போது கோயில் அலுவலகத்தில் நிர்வாக அதிகாரி, நிரந்தர எழுத்தர், பூசாரி, காவலாளி கிடையாது. இதன் காரணத்தால் கோயில் அலுவலகம் பூட்டியே உள்ளது. நன்கொடை அளிக்க வருபவர்கள் கோயில் பூட்டி இருப்பதால் திரும்பிச் சென்றுவிடுகின்றனர். எனவே கும்பாபிஷேக விழாப் பணிகளை சிறப்பாக நடத்திட கோயிலுக்கு தனி அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai