சுடச்சுட

  

  சிதம்பரம் அருகே பி. முட்லூரில் சித்தர் சுவாமிகள் மற்றும் ஓங்காரநந்தா சுவாமிகள் சிலை மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த நவம்பர் 4-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
   இதைத் தொடர்ந்து நடைபெற்று வந்த மண்டலாபிஷேகத்தின் நிறைவு விழா, புனித நதி தீர்த்தங்கள் சங்கம விழா மற்றும் சுவாமி கோட்டீஸ்வரானந்தா அதிபர் பட்டாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடலூர் குருமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. சித்தர் சுவாமிகள், ஓங்காரநந்தா சுவாமிகள் சிலைகள் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
   புனித நதி தீர்த்தங்கள் சங்கம விழா: பி.முட்லூரில் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் உள்ள குளத்தின் மையத்தில், சிரசில் கங்கையுடன் சிவபெருமான் சிலை அமைந்துள்ளது. இந்த குளத்தில் புனித தீர்த்தங்களை சங்கமிக்க அலகாபாத், கயா ஆகிய ஷேத்திரங்களிலிருந்து புனித நதிகளில் தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்பட்டு சங்கமம் செய்யப்பட்டது.
   ஓங்கார ஆசிரமத்தின் அதிபர் பட்டாபிஷேக விழா: ஓங்காரநந்தா சுவாமிகளால் ஓங்கார ஆசிரமத்தின் 6-வது அதிபராக தேர்வு செய்யப்பட்ட கோடீஸ்வரானந்தா சுவாமிகள் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. பின்னர் கோடீஸ்வரானந்தா சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai