சுடச்சுட

    

    திட்டப் பணிகள்: நில நிர்வாகத் துறை ஆணையர் கலந்தாய்வு

    By  கடலூர்,  |   Published on : 24th December 2014 12:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நில நிர்வாகத் துறை ஆணையர் காணொளிக் காட்சி மூலமாக கடலூர் மாவட்ட செயல்பாடுகள் குறித்து ஆட்சியருடன் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டார்.
     கடலூர் மாவட்டத்தில் நில நிர்வாகத் துறை மூலமாக செயல்படுத்தி வரும் பணிகள் குறித்து அத்துறையின் ஆணையர் கிரிஜா வைத்தியநாதன் சென்னையிலிருந்து காணொளிக் காட்சி மூலமாக செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
     இதற்காக, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய தகவல் மைய கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் பங்கேற்று மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் பணிகள் வருவாய்த் துறை, நில அளவைத் துறை மற்றும் பட்டாக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விளக்கினார்.
     கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், கடலூர் கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா, வேளாண்துறை துணை இயக்குநர் இளங்கோ, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) மகாலெட்சுமி, நில அளவைத்துறை உதவி இயக்குநர் தியாகராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிக்குமார் உள்பட துறை தொடர்பான அலுவலர்கள் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai