சுடச்சுட

  

  சிதம்பரத்தில் தந்தை பெரியார் படிப்பக வெள்ளி விழா நிகழ்ச்சி நடத்துவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   படிப்பகத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கா. கண்ணன், நகரத் தலைவர் கோவி.குணசேகரன், செயலாளர் சித்தார்த்தன், அமைப்பாளர் ரா. செல்வரத்தினம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பேராசிரியர் திருமாவளவன், செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.
   படிப்பக துணைத் தலைவர் ஆ.கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் பேசினர்.
   படிப்பகத்தின் வெள்ளி விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது, படிப்பகத்துக்கு தினசரி ஏடுகள், நூல்கள், மாத ஏடுகள் வழங்குபவர்களை நிகழ்ச்சியில் பாராட்டுவது, படிப்பகத்தில் மாதம் தோறும் வாசகர் வட்ட நிகழ்ச்சியை நடத்துதல் உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai