சுடச்சுட

  

  மாவட்டத்தில் 3.27 லட்சம் பேருக்கு  விலையில்லா மிக்ஸி, கிரைண்டர்

  By  கடலூர்,  |   Published on : 24th December 2014 12:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 27 ஆயிரத்து 428 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
   இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 36,598 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் தொகுதியில் 42,714 பயனாளிகளுக்கும், நெய்வேலி தொகுதியில் 28,948 பேருக்கும், பண்ருட்டி தொகுதியில் 39,939 பயனாளிகளுக்கும், கடலூர் தொகுதியில் 33,899 பேருக்கும், குறிஞ்சிப்பாடி தொகுதியில் 32,376 பயனாளிகளுக்கும், புவனகிரி தொகுதியில் 35,436 பயனாளிகளுக்கும், சிதம்பரம் தொகுதியில் 37,799 பேருக்கும், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 37,719 பயனாளிகளுக்கும் இப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
   மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் மொத்தம் 3 லட்சத்து 27 ஆயிரத்து 428 பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் தமிழக அரசினால் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai