சுடச்சுட

    

    காட்டுமன்னார்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழந்தது.
     காட்டுமன்னார்கோவில் வட்டம் கானூர் ஏரிப் பகுதியில் திரிந்த ஆண் மயில் ஒன்று மேலே சென்ற மின் கம்பியில் உரசியபடி பறந்தபோது, மின்சாரம் பாய்ந்து இறந்தது. அந்த மயிலுக்கு 2 வயது இருக்கும்.
     தகவல் அறிந்த சிதம்பரம் வனவர் பி.சோமசுந்தரம், வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்து கிடந்த மயிலை கைப்பற்றி சிதம்பரம் கால்நடை மருத்துவமனையில் பரிசோதனை செய்து புவனகிரி வெள்ளாற்றங்கரையில் புதைத்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai