Enable Javscript for better performance
முதல்வர் கோப்பைக்கான  விளையாட்டுப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் கோப்பைக்கான  விளையாட்டுப் போட்டிகள்

    By  கடலூர்,  |   Published on : 24th December 2014 12:19 PM  |   அ+அ அ-   |    |  

    கடலூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
     2014-15ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழுப்போட்டிகள் இரு பாலருக்கும் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் டிசம்பர் 26, 27ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
     டிசம்பர் 26ஆம் தேதி இருபாலருக்குமான தடகளம், கூடைப்பந்து, டென்னிஸ், மேசைப்பந்து, இறகுப்பந்து போட்டிகளும், பெண்களுக்கான கால்பந்து, கபடி போட்டிகளும் நடைபெறுகின்றன. டிசம்பர் 27ஆம் தேதி இரு பாலருக்குமான கையுந்துப் பந்து, வளைகோல் பந்து, நீச்சல் போட்டிகளும் ஆண்களுக்கான கால்பந்து, கபடிப் போட்டிகள் நடைபெறுகின்றன.
     இப்போட்டிகளில் டிசம்பர் 31 அன்று 25 வயதுக்குள்பட்டவர்கள் வயதுச் சான்று, இருப்பிடச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். தடகளம் மற்றும் நீச்சலில் இடம் பெற்றவர்கள் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
     முதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு முறையே ஆயிரம் ரூபாய், ரூ.750, ரூ.500 பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கோ.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai