சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   பணியிறக்கம் செய்யப்பட்ட 7 துணை ஆட்சியர்களுக்கு மீண்டும் பதவி உயர்வு வழங்க வேண்டும், பதவி உயர்வு வழங்கப்படாத வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வருவாய் துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் ஆட்சியரகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சு.எழிலன் தலைமை வகித்தார். செயலர் எஸ்.சிவா முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் பா.மகேஷ், ஆர்.சையது அபுதாகீர், இணைச் செயலர் டி.உதயகுமார், பொருளர் அ.பலராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   திட்டக்குடி: திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரத்தினாவதி, வட்டச் செயலர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் ஜெ.ரவிச்சந்திரன் கண்டன உரையாற்றினார்.
   நிர்வாகிகள் மோகன்தாஸ், வாசுகி, மஞ்சுளா, தேவிபாரதி, கந்தவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   சிதம்பரம்: சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வட்டத் தலைவர் ஆர்.பழனியப்பன் தலைமை வகித்தார்.
   வட்டச் செயலாளர் எம்.சோமசுந்தரம், பொருளாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   பண்ருட்டி: பண்ருட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டக் கிளை தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலர் (நகரம்) கீதா 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். அலுவலக உதவியாளர் சங்கத் தலைவர் குப்புசாமி உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியர்களும் இதில் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai