சுடச்சுட

  

  வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

  By  விருத்தாசலம்,  |   Published on : 24th December 2014 12:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருத்தாசலத்தில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும், வழக்குரைஞர்கள் மீது பொய்வழக்குப் போடுவதை நிறுத்த வேண்டும், 3 ஆண்டுகள் பயிற்சி முடித்த வழக்குரைஞர்களுக்கு மாதம் 3,000 ஊதியம் வழங்க வேண்டும் எனவும், திருச்சியில் வழக்குரைஞர்களை தாக்கிய போஸீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விருத்தாசலத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   ஆர்ப்பாட்டத்துக்கு மூத்த வழக்குரைஞர் வே.அம்பேத்கர் தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் எம்.கே.விஜயகுமார், நடராஜன், ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர்கள் ராஜா, விஸ்வநாதன், ரவிச்சந்திரன், கருணாநிதி, முருகவேல், அசோக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai