Enable Javscript for better performance
வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை:  பண்ருட்டி நகராட்சி அதிரடி- Dinamani

சுடச்சுட

    

    வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை:  பண்ருட்டி நகராட்சி அதிரடி

    By  பண்ருட்டி  |   Published on : 24th December 2014 12:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டியில், கடந்த 2 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத இரு கடைகளை நகராட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை கையகப்படுத்தி, அதில் இருந்த பொருள்களை லாரியில் ஏற்றிச் சென்றனர்.
     பண்ருட்டி பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை நகராட்சி நிர்வாகம் வாடகைக்கு விட்டுள்ளது. இதில் இரு கடைகளை சண்முகம், சாமிநாதன் ஆகியோர் குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வந்தனராம். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமலும், உரிமத்தை புதுப்பிக்காமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
     இந்நிலையில், நகராட்சி ஊழியர்கள் மேற்கண்ட இரு கடைகளையும் செவ்வாய்க்கிழமை கையகப்படுத்தினர். அதில் இருந்த பொருள்களை லாரியில் எடுத்துச் சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai