சுடச்சுட

  

  20 ஆயிரம் பேருக்கு  யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை

  By  கடலூர்,  |   Published on : 24th December 2014 12:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தில் யானைக்கால் நோய் தடுப்புப் பணிகள் கடந்த 14ஆம் தேதி துவங்கியது. இதனைத் தொடர்ந்து திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், அரிசிபெரியாங்குப்பம், கரையேறவிட்டக்குப்பம் ஊராட்சிகளில் யானைக்கால் நோய் ஒழிப்பு மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது.
   பாதிரிக்குப்பம் ஊராட்சித் தலைவர் கோமதி சிவலிங்கம் தலைமை வகித்தார். திருவந்திபுரம் மருத்துவ அலுவலர் ராம்சங்கர் முன்னிலை வகித்தார். கிராம சுகாதார செவிலியர் கே.அனுசுயா தலைமையில் செம்மண்டலம் அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் குழுவினர் சுமார் 89 பேர் பங்கேற்று வீடு, வீடாகச் சென்று டிஇசி மற்றும் அல்பெண்டோசோல் நோய் தடுப்பு மாத்திரைகளை வழங்கினர். ஒரு வாரம் நடைபெற்ற இந்த முகாமில் 20,559 நபர்களுக்கு மாத்திரை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai